கஞ்சா விற்பனை செய்த இரண்டு நபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள கீழகுயில்குடி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு நபர்கள் காவல்துறையினர் கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர்.
இதனை பார்த்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அவர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் சுப்பையா மற்றும் காசிராஜன் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்த இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.