நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையானது. இதனையடுத்து 30 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 40 காசுகளாக விற்பனையான நிலையில் 2 நாட்களாக 10 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 50 காசுகளாக விற்பனையானதை தொடர்ந்து, இரண்டாவது நாளாக 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகிறது.