Categories
சினிமா

இளையராஜாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்…. அப்படி என்ன செய்தாருனு நீங்களே பாருங்க….!!!!!

இசைஞானி இளையராஜா பல வருடங்களாக பிரசாத் ஸ்டூடியோவில் தனது இசை பயணத்தை தொடர்ந்து வந்தார். ஆனால் தற்போது இசைஞானி புதிய ஸ்டுடியோவிருக்கு மாறியுள்ளார். இதையடுத்து இசைஞானி புதிய ஸ்டூடியோவிற்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் வருகின்றனர். அதன்படி ரஜினி வருகை தந்து இளையராஜா இசையமைப்பை நேரடியாக பார்த்து சென்றார். அதனைத் தொடர்ந்து நடிகர் கமலஹாசனும் இளையராஜாவை அவரது புதிய ஸ்டுடியோவில் நேரில் சென்று சந்தித்துள்ளார்.

கமல்-இளையராஜா என்ற கூட்டணி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். அந்த வகையில் மூன்றாம் பிறை, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள் மற்றும் விருமாண்டி போன்ற பல படைப்புகளை காலத்தால் அழியாத காவியங்களாக நமக்கு பரிசளித்தனர். மேலும் கமல்ஹாசன் இளையராஜாவிற்கு மிகவும் நெருக்கமானவர் மற்றும் பிடித்தமானவர் என்று கூறப்படுகிறது. தற்போது இளையராஜா மற்றும் கமலஹாசன் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றனர்.

Categories

Tech |