தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 -12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மாணவர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு செல்கின்றனர். ஆனால் இதற்கு மத்தியில் கொரோனா குறித்த அச்சம் நிலவி வருவதால், பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப தயங்குகிறார்கள்.
இந்நிலையில் நீண்ட நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல் மன அழுத்தத்தில் இருந்த மாணவர்களுக்கு கொரோனாவை காரணம் காட்டி பீதியை ஏற்படுத்த வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நீண்ட காலமாக பள்ளிக்குச் செல்லாமல் மன அழுத்தத்தின் மாணவர்கள் இருந்தனர். தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியுடன் மாணவர்கள் செல்கின்றனர். அவர்களிடம் கொரோனா குறித்து பேசி பீதியை கிளப்ப வேண்டாம் என்று கூறிஉள்ளார்.