Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டன்சியிலிருந்து விலகிய கோலியின் …! மாஸ்டர் பிளான் இதுதான் – பிராட் ஹாக் ….!!!

முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை சமன் செய்யும் முயற்சியில்  விராட் கோலி ஈடுபட்டுள்ளார் என்று முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் 3 வடிவிலான போட்டியிலும் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வந்தார் .இந்நிலையில் டி20 கேப்டன் மற்றும் ஐபிஎல்-யில்  பெங்களூர் அணி கேப்டன் பதவிகளிலிருந்து விராட் கோலி விளங்கியுள்ளார் .மேலும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும்  ஒரு வீரராக அணியின் வெற்றிக்கு பாடுபடுவேன் என்று  அவர் கூறியுள்ளார்.  விராட் கோலி டெஸ்ட் தொடரில் 27 சதங்களும், ஒருநாள் தொடரில் 43 சதங்களும் என மொத்தமாக 70 சதம் அடித்துள்ளார்.

இந்நிலையில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய விராட்கோலி குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் கூறுகையில், “சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் அடிக்கும் சாதனையை சமன் செய்யும் முயற்சியில் விராட் கோலி ஈடுபட்டுள்ளார் என்று அவர் கூறியுள்ளார் .அதோடு சர்வதேச கிரிக்கெட் தொடரில் 100 சதங்கள் அடித்து  விளாசிய ஒரே இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார் .அவர் டெஸ்ட் தொடரில் 51 சதங்களும் ,ஒருநாள் தொடரில் 49 சதங்களும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |