Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தைகளை கூறி…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நீதிபதி வழங்கியுள்ளார்.

சேலம் மாவட்டத்திலுள்ள பெரமனூர் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கலக்கம்பாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தார். கடந்த 2012-ஆம் ஆண்டு இவருக்கும், பட்டதாரி பெண்ணிற்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசையாக பேசி அந்தப் பெண்ணை அவர் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து கர்ப்பமான அந்தப் பெண்ணை செந்தில்குமார் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.

இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்தது நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில் ஆசை வார்த்தை கூறி பெண்ணை ஏமாற்றிய குற்றத்திற்காக ஆசிரியர் செந்தில்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Categories

Tech |