Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021: பஞ்சாப் கிங்ஸ் VS ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல் ….!!!

14-வது ஐபிஎல் சீசன் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

14-வது ஐபிஎல் சீசன் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் நடப்பு சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில்       7 வது இடத்தில் உள்ளது ,அதேபோல் 7 போட்டிகளில் விளையாடிய ராஜஸ்தான் அணி 3-ல்  வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

இதுவரை 22 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதி உள்ளன .இதில் ராஜஸ்தான் 12 போட்டியிலும், பஞ்சாப் 10 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால்  பிளே ஆப் சுற்றுக்குள்  நுழைய இனி வரும் போட்டிகளில் இரு அணிகளுக்குமே வாழ்வா சாவா போட்டியாக இருப்பதால்  இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Categories

Tech |