பிரித்தானியா மீதான பயன்க்கட்டுப்பாடுகளை தளர்த்தியதாக வெள்ளைமாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
பிரித்தானியா பிரதமரான போரிஸ் ஜான்சன் கடுமையான பயண கட்டுப்பாட்டு விதிமுறைகளை அகற்ற வேண்டும் என்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடனிடம் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து வெள்ளை மாளிகை தற்போது வெளிநாட்டு பயணிகள் அமெரிக்காவில் நுழைவதற்கான இரண்டரை ஆண்டுகள் தடையை அகற்றுவதாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு எதிராக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் வரும் நவம்பர் மாதம் முதல் அமெரிக்காவில் எந்தவித தடையும் இல்லாமல் நுழையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் வரவேற்று உள்ளார்.
இதற்காக அமெரிக்கா அதிபரையும் பாராட்டியுள்ளார். இதுகுறித்து பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதில் “அமெரிக்காவிற்கான பயணத்தை மீண்டும் துவக்கியது சிறப்புக்குரியது. குறிப்பாக வர்த்தகம் மற்றும் வணிகத்திற்கான முக்கிய திறவுகோலாகும். இதன் மூலம் இரு நாடுகளிலும் பிரிந்து வாழும் நண்பர்களும் குடும்பத்தினரும் மறுபடியும் இணைவதற்கான ஒரு நல்ல வாய்ப்பாகும்” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதற்கு முன்னர் கடந்த ஜூலை மாதம் நல்லெண்ண அடிப்படையில் முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்ட அமெரிக்கர்கள் மீதுள்ள பயணக்கட்டுப்பாடுகளை பிரித்தானியா நீக்கியது குறிப்பிடத்தக்கது.