கேரளாவில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதன்காரணமாகவே அம்மாநிலத்தில் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகின்றது. இதுவரை 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது: கேரளாவில் 75 சதவீதம் பேர் அறிகுறி அற்றவர்களாக இருப்பதால் சோதனைகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.
மக்கள் முறையாக கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். யாரும் 2 தடுப்பூசி போட தயங்கக்கூடாது. மாநிலம் முழுவதும் தகுதி படைத்த 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களில் சுமார் 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.