குரங்கன்ஓடை பகுதியில் புதிதாக தொழிற்சாலைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆனந்தம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த மனுவில் சென்னிமலையிலிருந்து ஊஞ்சலூர் வரையிலும் குரங்கன்ஓடை செல்கிறது. இந்த ஓடையில் மழை நீரும், கழிவு நீரும் செல்வதால் நிலத்தடி நீர் ஆதாரம் மூலமாக விவசாய நிலங்கள் பயன் பெறுகிறது.
இந்நிலையில் ஆனந்தபாளையம், செல்லாத்தாபாளையம், குலவிளக்கு, எழுமாத்தூர் போன்ற கிராமங்களில் குரங்கன்ஓடையை ஒட்டி உள்ள பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு சிலர் நிலம் வாங்கி இருப்பதாக தகவல் வெளிவந்தது. மேலும் குளிர்பான தொழிற்சாலை அமைக்க இருப்பதாகவும் தெரிகின்றது. ஆகவே குரங்கன்ஓடை பகுதியில் புதிதாக தொழிற்சாலை அமைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கக் கூடாது என்று பொதுமக்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.