Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அரங்கேறிய கொள்ளை சம்பவம்…. சிசிடிவி கேமரா ஆபரேட்டர் தற்கொலை…. மறுவிசாரணைக்கு கொடுக்கப்பட்ட மனு….!!

சிசிடிவி கேமரா ஆபரேட்டர் தூக்கிட்டு  தற்கொலை செய்துக்கொண்ட வழக்கில் மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு பகுதி எஸ்டேட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்த ஓம்பகதூர் என்பவர் கடந்த 2017- ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக நடத்தப்பட்ட வழக்கில் காவல்துறையினர் சயான் மற்றும் வாளையாறு மனோஜ்  உட்பட 10 நபர்களை கைது செய்துள்ளனர்.

மேலும்  இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இந்த வழக்கில் முழு விசாரணை நடத்துவதற்காக நீதிமன்றம் அனுமதி கொடுத்ததை தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தியின் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த விசாரணையில் சம்பவத்தன்று எஸ்டேட் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் செயல்படாமல் இருந்தது தெரியவந்துள்ளது.

அதோடு சிசிடிவி கேமராக்களின் ஆபரேட்டர் தினேஷ்குமார் கடந்த 2017 – ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தினேஷ்குமார் கண்பார்வை மங்கியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் சிசிடிவி கேமரா ஆபரேட்டரின் தற்கொலை இரண்டிற்கும் தொடர்பு இல்லை என நீலகிரி மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்ட் முரளி ரம்பா தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது தற்கொலை செய்து கொண்ட தினேஷ்குமாரின் வழக்கை மறுவிசாரணை செய்ய காவல்துறையினர் தாசில்தாரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் இது குறித்து தினேஷ்குமாருடன் வேலை பார்த்த பணியாளர்கள் மற்றும் அவர் சம்பந்தப்பட்ட பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |