Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பொய் வழக்கு போடுறாங்க…. தீக்குளிக்க முயன்ற வாலிபர்…. தஞ்சையில் பரபரப்பு….!!

பொய்வழக்கு போடுவதாக வாலிபர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஆனைவிழுந்தான் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டுக்கோட்டையில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 6-ஆம் தேதி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினர் மணிகண்டனை தடுத்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதனையடுத்து மணிகண்டனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் மணிகண்டன் கூறியபோது நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் மற்றும் குடிநீர் பழுதுபார்க்கும் பணியை நான் செய்து வந்தேன். அப்போது என் மீது மோட்டார் காணாமல் போனது தொடர்பாக பொய் வழக்குப்பதிவு செய்து தன்னை பணியிலிருந்து நீக்கி விட்டனர். இதனால் வாழ்வாதாரத்தை இழந்த எனக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அல்லது வேலை வாங்கி தர வேண்டும் என பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தேன். ஆனால் இதுகுறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்கொலைக்கு முயன்றதாக மணிகண்டன் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

அதன்பின் மணிகண்டனை தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் கைது செய்து பின் விடுவித்தனர். இதனைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் மக்கள் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவர். இந்நிலையில் காவல்துறையினர் பாதுகாப்பையும் மீறி மணிகண்டன் மீண்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் பாட்டிலுடன் வந்து தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றினர். அதன்பின் மணிகண்டனை போலீசார் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Categories

Tech |