Categories
அரசியல்

உ.பியில் முதல்வர் வேட்பாளராக…. களமிறங்கும் பிரியங்கா காந்தி…??

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை திருமதி பிரியங்கா காந்தி அவர்கள் தலைமையில் எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராகி வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் தற்போது தயாராகி வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது.  கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தியின் தலைமையில் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த முறை பிரியங்கா காந்தி முதல்வர் வேட்பாளராக களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பிரியங்கா காந்தி தலைமையில் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலைகாங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் முதல்வர் வேட்பாளராக களமிறங்குவது குறித்து அவர்தான் முடிவு செய்வார் என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |