விண்ணில் சொந்தமாக ஆய்வு மையத்தை அமைப்பதற்கான வேலைகள் தொடங்கியுள்ளது.
விண்வெளியில் புதிதாக ஆய்வு மையத்தை சீனா சொந்தமாக வடிவமைத்து வருகிறது. இந்த பணியானது 2021 ஆம் ஆண்டுக்குள் முழுவதுமாக முடிவடையும் என்று சீனா கூறியுள்ளது. மேலும் அந்த விண்வெளி மையத்திற்கு தியான்ஹே என்று பெயரிட்டுள்ளனர். இந்த விண்வெளி மையத்திற்கான நடுப்பகுதியை கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து விண்வெளி மையத்தை கட்டமைக்கும் பணிகளுக்காக கடந்த ஜூன் மாதத்தில் சென்ஷு 12 விண்கலம் மூலம் 3 விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டனர். மேலும் அவர்கள் 90 நாட்கள் தங்கியிருந்து கட்டுமான பணிகளை மேற்கொண்டனர். குறிப்பாக அவர்கள் சென்ற வாரம் தான் பூமிக்கு திரும்பியுள்ளனர்.
இதனை அடுத்து இரண்டாவது கட்டமாக மூன்று விண்வெளி வீரர்களை அடுத்த மாதத்தில் சென்ஷு 12 விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்ப சீனா முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து விண்வெளியில் ஆய்வு மையத்தை அமைப்பதற்காக கட்டுமான பொருட்கள் மற்றும் விண்வெளி வீரர்களுக்கு தேவையான உணவு போன்றவற்றை ‘தியான்சவ்-3’ என்ற சரக்கு விண்கலம் மூலம் நேற்று விண்வெளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதிலும் சீனா நாட்டின் தெற்கில் ஹெனான் மாகாணம் உள்ளது. அந்த மாகாணத்தில் இருந்து long march-7 என்னும் ராக்கெட் வாயிலாக இந்த சரக்கு விண்கலம் விண்ணிற்கு செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இது புவியின் நீள் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்துவிட்டது என்பதனை அந்நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.