பஞ்சாப்பில் காங்கிரஸ் அரசின் புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ள சரண்ஜித்சிங் சன்னி தலித் சமூகத்தைச் சேர்ந்தவராவர். இதனை குறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அவர்கள் நபர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, “அரசியலில் சிக்கலான நேரத்தில் மட்டுமே தலித்துகளைப் பற்றி காங்கிரஸ் அரசும் மற்ற கட்சிகளும் நினைக்கின்றனர். இதன் காரணமாகவே சரண்ஜித்சிங் சன்னியின் பணிநியமனம் இருக்கிறது. இதுபோன்ற நாடகத்தால் தலித் இன மக்கள் மயங்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.
தலித்தின் மீது காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை இன்னும் ஏற்படவில்லை. அதனால் காங்கிரஸ் கட்சியில் தலித் இனத்தின் தலைமை இல்லாமல் தான் கட்சியானது சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தலித் இன மக்கள், காங்கிரசின் இந்த இரட்டை வேடத்தை குறித்து நம்பாமல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” என்று பேட்டி அளித்தார்.