ரஷ்யாவின் நாடளுமன்ற கீழவை தேர்தல் முடிவில், அதிபர் விளாடிமிர் புடினின் யுனைடெட் ரஷ்யா கட்சி முன்னிலையில் இருக்கிறது.
ரஷ்ய நாட்டில் 3 நாட்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்ற கீழவை தேர்தல் நிறைவு பெற்றது. மொத்தம், 450 இடங்களுக்கு நடந்த தேர்தலில், 39% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இத்தேர்தலில், ரஷ்யாவின் முக்கிய எதிர் கட்சி தலைவரான அலெக்ஸி நவால்னி போட்டியிட தடை விதிக்கப்பட்டிருப்பதால், அதிபர் புடினின் யுனைடெட் கட்சி, பெரும்பாலான இடங்களை கைப்பற்றும் என்று கூறப்படுகிறது.
பதிவான வாக்குகளில், 35% எண்ணப்பட்டுள்ளதாகவும், அதில் புடினின் யுனைடெட் ரஷ்யா கட்சி, 45% வாக்குகள் பெற்று, முன்னிலை வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சில இடங்களில், முறைக்கேடாக வாக்குகள் செலுத்த முயற்சிகள் நடந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, 45 வாக்குச்சாவடிகளில், 7465 வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.