Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “தொழிலில் இரட்டிப்பு லாபம் ஏற்படும்”…. ஏமாற்றுப் பேர்வழிகள் விலகுவார்கள்..!!

அனைவரையும் அன்பால் அரவணைத்து கொள்ளக்கூடிய மிதுன ராசி அன்பர்களே..!! இன்று புது வாழ்வில் புகழ் கூடும் நாளாக இருக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்க்க முயற்சி மேற்கொள்வீர்கள். இன்று தொழில் சிறப்பாக நடைபெறும். தொழிலில் இரட்டிப்பு லாபம் ஏற்படும். சேமிக்கக்கூடிய எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மட்டும் கொஞ்சம் தாமதம் ஏற்படும். ஆர்டர்கள் தொடர்பான காரியங்கள் தாமதத்தை கொடுக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். சக ஊழியர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

வெளிநாட்டில் பணிபுரியும் அன்பர்களுக்கு அரசால் அனுகூலம் ஏற்படும். கடன்களில் இருந்து விடுபடவும் இன்றும் உகந்த நாளாக இருக்கும். தொல்லை கொடுத்தவர்கள் விலகிச் செல்வார்கள், ஏமாற்றுப் பேர்வழிகள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய கூடும். ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது, முக்கியமான  காரியத்திற்கு செல்லும் போது வெள்ளை நிறத்தில் ஆடையோ அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்து சென்றால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |