Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தகவல் தெரிவிக்க முடியல…. அட்டகாசம் செய்த யானைகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

ரேஷன் கடைகளை யானைகள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநில காட்டுப்பகுதிகளில் உள்ள யானைகள் கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை வனப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. இந்த யானைகள் உணவிற்காக தேயிலைத்தோட்டத்தில் பணியாற்றிவரும் தொழிலாளர்களின் வீடுகள் மற்றும் ரேஷன் கடை போன்ற பகுதிகளை உடைத்து சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் முடீஸ் பஜார் பகுதியில் 5 யானைகள் புகுந்துள்ளன.

இதனையடுத்து அப்பகுதியில் ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்தியதோடு அரிசியை தின்றுள்ளது. மேலும் காட்டுயானைகள் அங்கிருந்த  வீடுகளையும் சேதப்படுத்தி விட்டு வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதனைக் கண்டு அதிர்ந்துபோன பொதுமக்கள் வனத்துறையினக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் பொதுமக்களோடு சேர்ந்து யானைகளை விரட்டி அடித்துள்ளனர்.

மேலும் யானைகள் செய்யும் இந்த அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் தூக்கமின்றி தவித்து வருவதாகவும், அதற்கு ரேஷன் கடைகள் குடியிருப்பு பகுதியில்  அமைந்திருப்பதே காரணம் என்றும் தெரிவித்துள்ளனர். அதோடு அப்பகுதியில் செல்போன் சிக்னல் சரியாக இல்லாததால் அவசர நேரத்தில் வனத்துறைக்கு தகவல் கொடுக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனச்சரகங்களில் அதிகமான ஊழியர்களை வாகன வசதியோடு கண்காணிப்பு பணியில்  ஈடுபடுத்தினால் உயிர் சேதங்கள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்றும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |