யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள பேய் மாமா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. மேலும் இவர் சில படங்களில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். தற்போது இவர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள பேய் மாமா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மாளவிகா மேனன், மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, கோவை சரளா, சிங்கம்புலி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விக்னேஷ் ஏலப்பன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ராஜ் ஆர்யன் இசையமைத்துள்ளார் .
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீண்ட நாட்களாக இந்த படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் பேய் மாமா படம் வருகிற செப்டம்பர் 24-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே நாளில் ராய் லட்சுமியின் சிண்ட்ரெல்லா, ரியோவின் பிளான் பண்ணி பண்ணனும் ஆகிய படங்களும் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது .