வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு வழக்கில் புகார்தாரர்களின் வாக்குமூலங்களை வழங்குவதற்காக அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட இரண்டு பேரை நேரில் ஆஜராகும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ் குமார், தேவசகாயம் உள்ளிட்டவர்கள் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் செந்தில் பாலாஜி உள்ளிட்டவர்கள் மீது சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் புகார்தாரர்களின் வாக்குமூலங்களை பெறுவதற்காக அக்டோபர் ஐந்தாம் தேதி நேரில் ஆஜராகும்படி செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.