Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெண் காவலர் வீட்டில் திருட்டு…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை….!!

பெண் காவலரின் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மன்னாய்க்கன்பாளையம் கிராமத்தில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணி புரிந்து வருகிறார். இவருக்கு விஜயபாரதி என்ற மனைவி இருக்கிறார். இவர் சென்னையில் உள்ள மாநகர காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இதனால் இவர்கள் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் மன்னாய்க்கன்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவிற்கு பாலச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு அவர்கள் தங்களின் வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றுவிட்டனர். இதனை அடுத்து மர்ம நபர்கள் இவர்களின் வீட்டிற்கு சென்று பின்பக்க கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை, வெள்ளிப் பொருட்கள் மற்றும் 10000 ரூபாய் பணத்தை திருடிச் சென்று விட்டனர். இது குறித்து அக்கம்பக்கத்தினர் பாலச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாலச்சந்திரன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சி.சி.டிவி காட்சி மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |