பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சரசுவதிபாளையம் பகுதியில் கோடீசுவரன் என்பவருக்கு சொந்தமான கேப்வெடிகள் தயாரிக்கும் ஆலை இருக்கின்றது. இந்த ஆலையில் 56 – வது அறையில் கேப்வெடி ஷீட்கள் காய வைக்கப்பட்டு இருந்தன. இந்த ஆலையில் பணியாற்றி வரும் சின்ன முனியாண்டி என்பவர் காய வைத்திருந்த கேப்வெடியை எடுக்கச் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக வெடி விபத்து நேர்ந்துள்ளது. இந்த வெடிவிபத்தில் சின்ன முனியாண்டி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சின்ன முனியாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.