Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… ‘வலிமை’ பட வில்லன் நடிகருக்கு பிறந்தநாள்… அதிரடியான போஸ்டரை வெளியிட்ட படக்குழு…!!!

வலிமை பட நடிகர் கார்த்திகேயாவின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி பிரபலம் புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இன்று நடிகர் கார்த்திகேயாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை வலிமை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த அதிரடியான போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Categories

Tech |