தமிழகத்தில் 2 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதிமுகவின் கேபி முனுசாமி, வைத்திலிங்கம் தங்களது எம்.பி பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.. அதனை தொடர்ந்து டாக்டர் கனிமொழி சோமு, கே.ஆர்.என் ராஜேஷ்குமார் ஆகியோர் 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு போட்டியிடுவதாக திமுக அறிவித்தது..
இந்த நிலையில் சென்னை, தலைமை செயலகத்தில், சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசனிடம் டாக்டர் கனிமொழி சோமு, கே.ஆர்.என் ராஜேஷ்குமார் ஆகியோர் முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
2022 ஜூனில் முடியும் வைத்தியலிங்கத்தின் பதவிக்கான இடத்துக்கு ராஜேஷ்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.. 2026 ஏப்ரலில் முடியும் கே.பி முனுசாமி பதவிக்கான இடத்துக்கு டாக்டர் கனிமொழி சோமு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.