கஞ்சா விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நவநீதகிருஷ்ணன் காந்திநகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் முனியாண்டி மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் 450 கிராம் கஞ்சாவை வைத்து விற்பனை செய்துள்ளனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இருவரின் மீதும் வழக்குப்பதிந்த காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து காமராஜர் சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ஜாபர் சித்திக் என்பவர் 310 கிராம் கஞ்சாவை விற்பனை செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜாபர் சிட்டிக்கை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.