4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவதற்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவதற்கு மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் பம்பர் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடையை நீக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது.. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பொதுமக்களின் நலன் கருதியே மத்திய அரசு இந்த தடையை விதித்ததாகவும், எனவே அதனை நீக்க முடியாது. மத்திய அரசு விதித்த உத்தரவை மாநில அரசுகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கூறி தலைமை நீதிபதி அமர்வு கோரிக்கையை நிராகரித்தது.
நான்கு சக்கர வாகனங்களின் முன் பம்பர் பொருத்துவதால் ஏர்பேக் வேலை செய்வதில்லை என்ற காரணத்திற்காகவே ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.