Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “சரக்குகளை வாங்கும் போது கவனம்”… சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள்..!!

நேர்மையான எண்ணம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே..!! இன்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி அகம் மகிழும் நாளாக இருக்கும். இன்று இடமாற்றம், ஊர்மாற்றம் அல்லது நாடு மாற்றம் போன்றவை ஏற்படக் கூடிய சூழல் இருக்கும். உறவினர்கள் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகளும் இருக்கும். இன்று தொழில் வியாபாரம் சற்று நிதானமாக தான் நடக்கும். எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் தொடர்பான செலவுகள் கூடும். சரக்குகளை வாங்கும் போது கவனித்து வாங்குவது பாதுகாப்பாக வைப்பது நல்லது. இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாகவே பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். நிதானமாகப் பேசி மற்றவரிடம் அனுசரித்துச் செல்வது காரிய வெற்றிக்கு வழிவகுக்கும்.

இன்றைய நாள் ஓரளவு மகிழ்ச்சியாகவே இருக்கும். சொன்ன சொல்லையும் காப்பாற்றி விடுவீர்கள். ஆனால் இனிமேல் யாருக்கும் எந்தவித வாக்குறுதியும் தர வேண்டாம். அந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொண்டால் இன்று பாராட்டுகளை அனுபவிக்க முடியும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது நீல நிற ஆடையோ அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையோ  எடுத்துச் சொல்லுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். தயவுசெய்து இதை முயற்சித்து பாருங்கள்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |