இருசக்கர வாகனம் மோதி சாலையில் நடந்து சென்ற விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாரணாபுரம் பகுதியில் விவசாயியான சோலைகூடலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செல்லையாநாயக்கன்பட்டி பகுதியில் இருக்கும் தனது மகன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் சோலைகூடலிங்கம் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது.
இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் சோலைகூடலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சோலைகூடலிங்கத்தை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சோலைகூடலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.