ரேஷன் கடையில் பொருட்களை வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்களை அலைக்கழிக்கும் ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கவரும் போது அலைக்கழித்தால் ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து, தமிழக உணவுப் பொருள் வழங்கல் துறை இதுதொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. வயதான நபர்களுக்கு பொருள்கள் வழங்க மறுப்பதாக வந்த புகாரை அடுத்து உணவுப் பொருள் வழங்கல் துறை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.