Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்த கார்த்திக்….. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் பகுதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நிலக்கோட்டையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கார்த்திக் தனது அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக்கின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |