சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் தப்பியோட முயற்சி செய்துள்ளனர். காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் காசிராஜன் மற்றும் பாண்டி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.