Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “எதிர்பாராத செலவு இருக்கும்”…. அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படும்..!!

அனைவரையும் குதூகலப்படுத்தும் கும்பராசி அன்பர்களே..!! இன்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாளாக இருக்கும். சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும். வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். நேற்றைய சேமிப்பு இன்று செலவுக்கு கைகொடுக்கும். இன்று அலுவலகத்தில் மேலிடத்திற்கு பயந்து வேலை செய்ய வேண்டியிருக்கும். உழைப்பு அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு கொஞ்சம் உண்டாகலாம் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வசம் உள்ள ஆவணங்களை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். சொத்து விவகாரங்களில் கவனம் இருக்கட்டும். எதிர்பாராத செலவு இருக்கும். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படும்.

வங்கிக் கடனுக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி  வரக்கூடும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியரின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். சக மாணவருடன் எந்தவிதமான சண்டையும் வேண்டாம். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்தை எதிர்கொள்ளும்போது மஞ்சள் நிற ஆடையோ அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் வெற்றி பெறும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் இளம் நீல நிறம்

Categories

Tech |