நியாயவிலைக் கடைகள் மூலமாக குறைந்த விலையில் அரிசி, பருப்பு, சீனி ஆகியவை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அரசின் நிதிஉதவிகளும் ரேஷன் கடை மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் வாங்க செல்லும் மக்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும், வயதானவர்களுக்கு பொருட்கள் வழங்க மறுக்கப்படுவதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது.
இதனை கருத்தில்கொண்டு ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களை அலைகழித்தால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக எச்சரிக்கி விடுத்துள்ளது.