ஐக்கிய ரஷ்யா கட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதை நம்பமுடியவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார்.
ரஷ்யா நாட்டில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன் மூலம் 450 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதன்படி 2021 ஆம் ஆண்டுக்கான தேர்தல் கடந்த 17 ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்று திங்கட்கிழமை அன்று முடிவடைந்தது. மேலும் தேர்வுகள் முடிவடைந்த திங்கட்கிழமையில் இருந்தே வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடங்கியது. இதனையடுத்து வாக்குகள் எண்ணும் பொழுதிலேயே ஐக்கிய ரஷ்யா கட்சி முன்னிலையில் இருந்துள்ளது. குறிப்பாக அக்கட்சி 450 இடங்களில் 314 இடங்களை பிடித்துள்ளது.
மேலும் கடந்த 2014 தேர்தலில் 54.2% வாக்குகள் பெற்று 334 இடங்களை வெற்றி வாகையை சூடியது. தற்பொழுது ஐக்கிய ரஷ்யா கட்சிக்கு சிறிது வீழ்ச்சி என்றாலும் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் அரசு நடத்திய கருத்துக்கணிப்பில் கூட 30% வாக்குகளை பெரும் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த கட்சி தனி பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியை கைப்பற்றியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இது குறித்து சிறையிலுள்ள எதிர்கட்சி தலைவரான அலெக்ஸி நாவல்னி கருத்து கூறியுள்ளார். அதில் “இந்த பொதுத் தேர்தல் முடிவை என்னால் நம்பமுடியவில்லை.
இவர்கள் 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மோசடி செய்தது போலவே இப்பொழுதும் செய்துள்ளனர்” என்று கூறியுள்ளார். குறிப்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில் மோசடி செய்ததாக கூறி எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸி நாவல்னி போராட்டம் நடத்தினார். இவரின் அனைத்து அமைப்புகளையும் பயங்கரவாதிகள் என்று கூறி அதன் தலைவர்கள் யாரும் தேர்தலில் பங்கேற்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. மேலும் தற்போதுள்ள அரசியல் சூழலில் அதிபர் விளாடிமிர் புதின் தான் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக திகழ்கிறார் என்பதால் அவரின் கட்சிக்கு மக்கள் அதிக அளவு ஆதரவு தெரிவிக்கின்றனர் என்று கூறப்படுகிறது.