இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் கனடா பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கனடா பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவு கடந்த திங்கட்கிழமை அன்று தொடங்கப்பட்டது. ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சிக்கும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் மத்தியில் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. தற்போது கிடைத்த தகவலின்படி ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களிலும் கன்சர்வேட்டிவ் கட்சி 122 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர்.
இதனால் லிபரல் கட்சி தான் ஆட்சியை கைப்பற்றும் என்று கனடா நாட்டு செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. மேலும் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட அனிதா ஆனந்த் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் oakville தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறையின் முன்னாள் அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக அனிதாவின் தந்தை தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும் தாயார் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. அதிலும் அனிதா ஆனந்த் 14, 500 வாக்குகள் பெற்றுள்ளார். இது 45.7 சதவீதம் ஆகும். இவரை எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான கெரி கொல்போர்ன் 34% வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.