Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தொடரும் வரதச்சனை கொடுமை…. புகார் கொடுத்த மனைவி…. போலீஸ் நடவடிக்கை….!!

வரதட்சனை கேட்டு துன்புறுத்திய கணவரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வடக்கு புறையூர் கிராமத்தில் அழகுராஜ்-ஜெயராணி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தில் பெண் வீட்டார் 20 பவுன் நகையை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் மேலும் 5 பவுன் நகை கேட்டு அழகுராஜ், மனைவியை துன்புறுத்தினார்.

இதற்கு அழகுராஜின் தாயார் கசங்காத்தா மற்றும் அவரது அக்கா மாரியம்மாள் உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்து ஜெயராணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா வழக்குப்பதிவு செய்து அழகுராஜை கைது செய்தனர். மேலும் அழகுராஜின் தாய் மற்றும் அக்காவை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |