Categories
சினிமா தமிழ் சினிமா

அறுவை சிகிச்சைக்குப் பின்… அர்ச்சனா தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சி… வெளியான தகவல்…!!!

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பல முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானவர் தான் அர்ச்சனா. மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமானார். சமீபத்தில் இவர் திடீரென மூளை அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை முடிந்து தற்போது உடல்நலம் தேறிய அர்ச்சனா புதிதாக ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் என்று தெரிய வந்துள்ளது. அந்த நிகழ்ச்சி என்னவென்றால் சினேகன் மற்றும் கனிகாவை வரவேற்கும் விதமாக விஜய் டிவியில் நம்ம வீட்டு கல்யாணம் எனும் நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளனர். இந்த நிகழ்ச்சியை ஏற்கனவே அர்ச்சனா தொகுத்து வழங்கியுள்ளார். அதனால் அவர் மீண்டும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |