நர்சிங் மாணவி திடீரென காணாமல் போனது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்திலுள்ள கூந்தன்குளம் வடக்குத் தெருவில் சிலுவை அந்தோணியின் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் ஜோயல் தூத்துக்குடியில் ஒரு விடுதியில் தங்கி தனியார் மருத்துவமனையில் நர்சிங் பயின்று வருகிறார். கடந்த 18-ஆம் தேதி விடுதியில் இருந்து ஜோயல் ஊருக்கு செல்வதாக வந்துள்ளார் .
ஆனால் ஜோயல் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இதனையடுத்து மாணவியின் தந்தை வடபாகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.