Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பஞ்சாயத்து தலைவரிடம் தகராறு…. கம்பியால் தாக்கிய சகோதரர்கள்…. கைது செய்த போலீஸ்….!!

பஞ்சாயத்து தலைவரை இரும்புக் கம்பியால் தாக்கிய அண்ணன்-தம்பியை காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கே சுந்தரேஸ்வர  புரத்தில் சோலையப்பன் மகன் போஸ் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருக்கின்றார். இதில் போஸ் அப்பகுதியில் பஞ்சாயத்து தலைவராக இருக்கின்றார். கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் மழை பெய்து வருவதால் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பாக வடிகால்களை ஜேசிபி எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அதே கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த சக்திவேல் மகன் செந்தில்குமார் என்பவர் தனது வீட்டின் முன்பு சரள் மண் குவித்து வைத்திருந்தார். இதனை அப்புறப்படுத்த முயன்றபோது செந்தில்குமார், பஞ்சாயத்து தலைவரிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. மேலும் செந்தில்குமார் மற்றும் அவரது அண்ணன் கருங்கதுரை ஆகிய இருவரும் பஞ்சாயத்து தலைவர் போஸை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பஞ்சாயத்து தலைவரின் மகன் கார்த்திக் செந்தில் குமாரை கம்பால் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த அவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார், கருங்கதுரை ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதேபோன்று செந்தில்குமார் அளித்த புகாரின்படி காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்தனர்.

Categories

Tech |