தேர்தல் சமயத்தில் ஜஸ்டின் ட்ரூடோவின் கருப்பு நிறத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவின் சில புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அதில் அவர் முகத்திலும் கைகளிலும் கருப்பு நிற சாயத்தைப் பூசிக் கொண்டு இருந்தார். இவ்வாறு முகம் முழுவதும் சாயத்தை பூசிக்கொள்வது கருப்பின மக்களை அவமதிக்கும் செயல் என்றும் இனவெறுப்பு கொள்கையை சார்ந்த விஷயமாகும் என்றும் கூறப்பட்டது. மேலும் அதே நேரத்தில் இப்படி செய்தது இன வெறுப்பு கொள்கை சார்ந்தது என்று எனக்கு தெரியாது குறிப்பாக இப்பொழுததான் இதன் தீவிரம் புரிகிறது.
இதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன் என்று ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருந்தார். இந்த நிலையில் ட்ரூடோ முகத்தில் கருப்பு வண்ணம் பூசியது போல புகைப்படம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. இது குறித்து ஜஸ்டின் ட்ரூடோ எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும் அவரின் எதிரணியினர் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டார் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த திங்கட்கிழமை அன்று தேர்தல் நடைபெற முடிவு செய்யப்பட்ட நிலையில் தான் இந்த புகைப்படமானது ஞாயிற்றுக்கிழமை சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இது குறித்து சமூக ஊடகங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ” இந்த புகைப்படமானது இருபது ஆண்டுகளுக்கு முன்பாக எடுக்கப்பட்டது. அதற்காக அவர் மன்னிப்பும் கேட்டு விட்டார் என்று கூறியிருந்தனர். ஆனால் இதை எதிர்ப்பவர்கள் குழந்தைகளுக்கே இந்த விஷயமானது தவறு என்று தெரியும்.
அப்படி இருக்கும் பொழுது இதனை ஜஸ்டின் ட்ரூடோ வேண்டுமென்றே செய்துள்ளார். இவரையா நீங்கள் பிரதமராக தேர்ந்தெடுக்க போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் சிலர் இவரை தேர்தலில் தோல்வியை சந்திக்க வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் தேர்தல் வாக்குகள் தற்பொழுது எண்ணப்பட்டு வரும் சமயத்தில் தற்போதைய நிலையைப் பார்த்தால் மக்கள் தவறாக நினைப்பது போல தெரியவில்லை.