Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பருவமழையை எதிர்கொள்ள…. துரிதப்படுத்தப்படும் தூய்மைப்பணிகள்…. மாவட்ட ஆட்சியரின் தகவல்….!!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தூய்மைத்திட்ட பணியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கம் மின்வாரிய காலனி, தாமரைகுளம், கே.கே சாலை, திருச்சி சாலை போன்ற பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் வாய்க்கால் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சியர் டி.மோகன் தொடங்கி வைத்துள்ளார். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு குடிநீர் வழங்கல் துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் இந்த தூய்மைப் பணிமுகாமை  6 நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் விழுப்புரத்திலுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த மாதம் 25-ஆம் தேதிவரை தூய்மைப்படுத்தும் திட்டப்பணிகள் நடைபெறுவதாக கூறியுள்ளார். மேலும் பருவ மழையின் காரணமாக டெங்கு, மலேரியா, நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தி மற்றும் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகும் அபாயம் போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதோடு விழுப்புரம் நகராட்சிக்கு உள்ள 7 வார்டுகளை வைத்துப் பிரிக்கப்பட்ட 6 மண்டலங்களில் தூய்மை பணிகள் நடைபெறுவதாகவும், தூய்மை பணி நடைபெறும் இடங்களில் சரியாக செயல்படாத தெருவிளக்குகள், சாலை வசதிகள் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை சரி செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தூய்மைப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் விடுப்பில் செல்ல மாட்டார்கள் என்றும், மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் அமைக்கப்படும் பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அதனை உரிய நபரிடம் முந்தைய தினமே தெரிவித்து அகற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.

அதோடு காலி இடங்களில் தேங்கியுள்ள திடக்கழிவுகளை அகற்றி உடனே அந்தப் பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என கூறியுள்ளார். இந்த திட்ட தொடக்க பணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஸ்ரீநாதா, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிவசேனா, உதவி கோட்ட பொறியாளர் தனராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் மற்றும் உதவி பொறியாளர்கள் வசந்தப்ரியா, அனிதா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |