Categories
உலக செய்திகள்

பணத்திற்காக காதலர் கொலை செய்தாரா….? குளியலறையில் இறந்து கிடந்த பெண்…. வழக்கில் ஏற்பட்ட புதிய திருப்பம்….!!

பணத்திற்காக காதலியை கொலை செய்த காதலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Anna Florence Reed  என்னும் 22 வயது பிரித்தானியா பெண் தன் காதலரான Marc Schatzle என்ற ஜெர்மன் நாட்டவருடன் நெருக்கமாக இருக்கும் போது மூச்சுத்திணறி இறந்துவிட்டார் என்றும் அவரின் சடலம் குளியலறையில் கிடைத்தது எனவும் தகவல்கள் வெளியாகியது. தற்பொழுது இந்த வழக்கில் புதிய திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது Anna இறந்த Ticinoவில் இருக்கும்  La Palma au Lac என்ற தனியார் விடுதியின் லிப்ட் ஒன்றில் அவரின் கிரெடிட் கார்ட் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். மேலும் Anna ஒரு  பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் பணத்திற்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் Marc  இரவு நேர விடுதிகளிலும் மதுபான கடைகளிலும் பவுன்சராக பணிபுரிந்துள்ளார்.

மேலும் அவருக்கு 40000 பவுண்டுக்கு மேலாகவும் அவருக்கு கடன் உள்ளது. ஆனால் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த Anna வங்கி கணக்கிலோ 25000 பவுன்டுகளுக்கு மேலாக பணம் இருப்பதை Marc அறிந்துள்ளார். குறிப்பாக லிப்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிரெடிட் கார்டு குறித்து கேட்ட போது விளையாட்டிற்காக அதனை மறைத்தேன் என்று கூறியுள்ளார். ஒருவேளை அவர் அதை வேண்டுமென்றே திருடி வைத்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் Annaவை பணத்திற்காக கொலை செய்துவிட்டு நெருக்கமாக இருந்ததில் மூச்சுத்திணறி இறந்து விட்டார் என பொய் கூறுகிறார் என்று இறந்த பெண்ணின் வழக்கறிஞர் கூறுகிறார்.

ஆனால் இறப்பதற்கு முன் தினம் அறையில் இருவரும் சண்டை போட்டுள்ளனர். மேலும் கண்ணாடி உடையும் சத்தத்தை  பக்கத்து அறையில் இருந்தவர்கள் கேட்டுள்ளனர். அதிலும் ஒரு வெயிட்டரை அழைத்து அவர்கள் இருவரையும் அமைதியாக இருக்கும்படி சொன்னதாக விடுதியின் மற்ற ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் Marcகின் வழக்கறிஞர்களோ மூச்சுத்திணறி தான் Anna மரணம் அடைந்துள்ளார் என்று கூறியுள்ளனர். ஆனால் தற்பொழுது இந்த வழக்கானது தலைகீழாக மாறி விட்டதால் இனி Marc நிலைமை சிக்கலாகிவிட்டதாக கூறப்படுகிறது.

Categories

Tech |