9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி பறக்கும் படை அமைக்க மாநில தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.. அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறுகிறது.. இந்த தேர்தலுக்கான பணிகளில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் இயங்கி வருகிறது..
இந்த நிலையில் 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலையொட்டி பறக்கும் படை அமைக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது..
அதாவது, ஒரு செயற் குற்றவியல் நீதிபதி மற்றும் இரண்டு அல்லது மூன்று காவலர்கள் கொண்ட பறக்கும் படை அமைக்கப்படவேண்டும். 3 ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய தொகுப்பிற்கும் ஒரு பறக்கும் படை இடம்பெற வேண்டும். உரிய ஆவணங்கள் இன்றி 50 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுத்து சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும். பறக்கும் படைகளின் ஆய்வு பறிமுதல் செய்யப்படும் நிகழ்வுகள் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.,