Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆடு மேய்க்க சென்ற விவசாயி…. இடிதாக்கி நடந்த விபரீதம்…. நிதி வழங்கிய எம்.எல்.ஏ….!!

இடி விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி 4 லட்சம் ரூபாயை எம்.எல்.ஏ. வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் கடந்த 19-ஆம் தேதி விவசாயி முருகையா என்பவர் ஆடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது முருகையா மீது இடி விழுந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை அறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், முதலமைச்சர் நிதிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு 4 லட்சம் ரூபாய் நிதியை முருகையா குடும்பத்தினரிடம் வழங்கினார்.

அப்போது ஒட்டப்பிடாரம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், ஒன்றிய பெருந்தலைவர் ரமேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷ்வேல், வருவாய் கோட்ட அலுவலர், வட்டாட்சியர் போன்றோர் அவருடன் இருந்தனர்.

Categories

Tech |