Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

என்ன கிண்டல் பன்றாங்க… ரசிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோகன்லால்… கண்கலங்கி அழுத மூதாட்டி…. வைரலாகும் வீடியோ!!

நடிகர் மோகன்லால் தனது ரசிகைக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்..

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லால்(61) மலையாள சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார்.. 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் வலம் வரும் மோகன்லால் இதுவரை 340 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.. தமிழில் ஜில்லா, காப்பான்  உட்பட பல்வேறு படத்திலும் நடித்து தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்ட ஒருவர்.. இவருக்கு மலையாளம் மட்டுமில்லாமல் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி ரசிகர்கள் இருக்கின்றனர்..

Mohanlal speaks to Rukmini Amma after video went viral | Entertainment News  | Onmanorama

இந்த நிலையில், நடிகர் மோகன்லால் தனது ரசிகைக்கு ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். அதாவது, கேரளாவின் திருச்சூர் அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வரும் ருக்மினி அம்மாள் என்பவரை வீடியோ காலில் அழைத்துப் பேசி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகர் மோகன் லால்..

I want to meet Mohanlal, says Rugmini Amma crying; watch the actor's video  call | Mohanlal calls Rugmini Amma| Mohanlal video call his elderly fan

 

எப்போதும் நடிகர் மோகன் லால் பற்றியே பேசுவதால் மற்றவர்கள் ருக்மணி அம்மாளை கிண்டல் செய்து வந்துள்ளனர்.. இந்த சூழலில் மோகன்லாலிடம் அந்த பாட்டி அழுதபடி பேசும் வீடியோ மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.. அதே நேரத்தில் மலையாள ரசிகர்கள் உட்பட பலரும் மோகன்லாலை பாராட்டி வருகின்றனர்..

https://twitter.com/MohanlalMFC/status/1439976831768150016

Categories

Tech |