Categories
அரசியல்

நகையே இல்லாமல்…. வெறும் பையை வைத்து ரூ.2 கோடி…. அதிமுக ஆட்சியில் பெரும் மோசடி…!!!

கடந்த அதிமுக ஆட்சியில் நகைகடனில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று திமுக அரசு பெரும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குரும்பூர்  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மாபெரும் மோசடி நடைபெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. குரும்பூர் அங்கமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் பெற்றுள்ளவர்களின் விவரங்களை திருச்செந்தூர் கூட்டுறவு சங்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது வங்கியில் நகையே வைக்காமல் போலியான பையை வைத்து அதில் நகை இருப்பது போல கூறி கடன் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த விசாரணையில், வங்கியில் நகைகடன் பெறப்பட்ட 548  நகை பொட்டலங்களில் 271 பொட்டலங்கள் மாயமாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 2 கோடி என்று கூறப்படுகிறது. அதேபோல வங்கியில் டெபாசிட் செய்த பணம் இருக்கிறதா? என்று வாடிக்கையாளர்கள் பார்த்தபோது டெபாசிட் பணத்தை வாடிக்கையாளர்கள் கணக்கில் வரவு வைக்காமல் போலியான பண்ட கொடுத்து அதையும் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.  நகையே இல்லாமல் வெறும் பையை மட்டுமே வைத்து நகை கடன் பெற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |