மதுரை சேர்ந்த மகேந்திரன் என்பவர், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கடந்த 2011- 13 ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார். மேலும் இதனை குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்தும் எவ்வித பயனும் இல்லை. அதனால் அவர் நீதிமன்றத்தை நாடினார். ஆனால் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்யநாராயணன் ஹேமலதா ஆகிய இருவரும் முரண்பாடான தீர்ப்பினை அளித்துள்ளனர்.
இதனால் வழக்கானது தலைமை நீதிபதியால் மூன்றாவது நீதிபதியான நிர்மல்குமார் இடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை எதிர்த்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இவ்வழக்கானது கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி 3-வது நீதிபதியிடம் விசாரணைக்கு வந்தபோது அரசின் சார்பாக ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா அவர்கள் கூறியதாவது, “73 சதவீதம் அளவுக்கு ராஜேந்திரபாலாஜி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதனால் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிப்பதில் எந்தத் தடையும் இல்லை” என்று தெரிவித்தார். இதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதியிடம் மறு வாதிட்ட ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர், “இவ்வழக்கு எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதுவரை இவ்வழக்கினை தள்ளிவைக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது அதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதி நிர்மல் குமார் அவர்கள் உச்சநீதிமன்றத்திற்கு தீர்ப்பு சொல்வதற்கு இடைக்கால தடை விதித்ததோடு, தமிழக அரசின் பதிலையும் கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளது உச்சநீதிமன்றம். உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இடைக்கால தடையானது ராஜேந்திர பாலாஜிக்கு தற்பொழுது நிம்மதி அளித்துள்ளது.