Categories
அரசியல்

“தம்பி பிடிஆர் கவனத்தில் கொள்”…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை…!!!

45வது ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ளாதது குறித்து விளக்கம் அளித்திருந்தார். அதில் எனக்கு கடைசி நேரத்தில் தான் அழைப்பு வந்தது. அதுமட்டுமின்றி கூட்டத்தில் எதைப் பற்றி விவாதிக்கப் போகிறோம்? என்பது குறித்த தகவல்களும் கடைசி நேரத்தில்தான் தெரிவிக்கப்பட்டது. இதுவரை ஆன்லைன் வழியாக கூட்டம் நடந்த நிலையில் திடீரென்று நேரடியாக லக்னோ வரச்சொல்லி அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்டுகிற ஜிஎஸ்டி கூட்டத்தில் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்காதது வருத்தம். சொல்லப்படுகிற காரணமும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

பொதுமக்கள்- வணிகர்கள் ஆகியோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் 30க்கும் மேற்பட்ட ஜிஎஸ்டி கூட்டங்களில் நான் கலந்து கொண்டுள்ளேன். ஒருமுறைகூட பங்கேற்காமல் இருந்தது இல்லை. நிதியமைச்சர் தனது கடமையை செய்யாமல் இருப்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா? என்று குறிப்பிட்ட அவர் கடைசியில் “தம்பி பிடிஆர் கவனத்தில் கொள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Categories

Tech |