அம்மன் கழுத்தில் கிடந்த நகையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாகலூர் கிராமத்தில் விஷமீண்ட மாரியம்மன் கோவில் இருக்கின்றது. இந்த கோவில் கேட்டை உடைத்து மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் கிடந்த 6 கிராம் தங்க தாலியை திருடிச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அந்தப் புகாரின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்தனர். மேலும் சாமி நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.