Categories
உலக செய்திகள்

பாதுகாப்பு அமைச்சக பணியாளர் செய்த சிறிய தவறு.. நூற்றுக்கணக்கான மக்களின் பரிதாப நிலை..!!

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் பணியாளர், நூற்றுக்கணக்கான மொழிபெயர்ப்பாளர்களின் தனிப்பட்ட தகவல்களை மின்னஞ்சலில் நகல் எடுத்த சம்பவம் பெரும் பிரச்சினையை உருவாக்கியுள்ளது.

பிரிட்டன் நாட்டின் மொழிபெயர்ப்பாளரார்களாக பணியாற்றிய ஆப்கானிஸ்தானை சேர்ந்த 250 நபர்களுக்கு தலிபான்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற மோசமான நடவடிக்கையால், ஆத்திரம் அடைந்துள்ள பாதுகாப்பு செயலர், பென் வாலஸ் விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறார்.

பிரிட்டன் நாட்டின் இராணுவத்திற்காக பணிபுரிந்த,  250 மொழிபெயர்ப்பாளர்கள்  ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற கோரியிருந்தார்கள். எனவே, அவர்களின், தகவல்களை, பாதுகாப்பு அமைச்சகம் கேட்டபோது தான் இந்த தவறு நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலீபான்கள், கைப்பற்றிய பின்பு, பிரிட்டன், அமெரிக்கா, மற்றும் கனடா போன்ற நாடுகள் தங்கள் நாட்டு மக்களை விமானங்களை அனுப்பி மீட்க தொடங்கியது. ஆனால் தலிபான்கள் கொடுத்த காலக்கெடு முடிந்ததால், அந்த நடவடிக்கை பாதியில் கைவிடப்பட்டது. எனவே, நூற்றுக்கணக்கான மக்கள், ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், பிரிட்டன் நாட்டிற்காக பணிபுரிந்த, மொழிப்பெயர்ப்பாளர்கள் பலர், உயிருக்கு  பயந்து மறைந்து வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் பணியாளர் அனுப்பிய மின்னஞ்சலுக்கு, பல பேர் பதில் அளித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், இது, அவர்கள் மறைந்திருந்தாலும், அவர்கள் இருக்குமிடத்தை தலிபான்களுக்கு தெரியப்படுத்திவிடும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த தவறுக்காக வருந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பணியாளர்கள், மன்னிப்பு கோரியுள்ளார்கள். மேலும், இனிமேல் இவ்வாறான தவறுகள் நிகழாது என்று உறுதியளித்திருக்கிறார்கள்.

Categories

Tech |